தேர்தல் செலவினங்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை.!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது.

Update: 2021-03-09 12:46 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது.

இதனிடையே அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது. இதற்கிடையில் தமிழக சட்டமன் தேர்தலில் வேட்பாளர்கள் செய்யும் செலவினங்கள் குறித்து சிறப்பு செலவின பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தியுள்ளார்.


 



தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வருமான வரித்துறை, சுங்கத்துறை, வணிகத்துறை, துணை ராணுவப்படை, காவல்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூகுள் பே, போன் பே, போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் முறையில் வாக்காளர்களுக்கு பணம் பறிமாற்றம் செய்வதை தடுப்பது தொடர்பாகவும், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்த வேட்பாளரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செலவு செய்யும் பட்சத்தில் அதனை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

Similar News