9 மாவட்டங்களில் மது விற்பனைக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்!

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகின்ற 9 மாவட்டங்களில் மதுபானம் விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.;

Update: 2021-09-30 08:08 GMT

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகின்ற 9 மாவட்டங்களில் மதுபானம் விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கும் அடுத்த மாதம் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதனையடுத்து முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் அக்டோபர் 4ம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 6ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் அக்டோபர் 7ம் தேதி முதல் 9 நள்ளிரவு 12 மணி வரையில் மதுபானம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்டோபர் 12ம் தேதியும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Kumudham


Tags:    

Similar News