அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!
அதிமுக செயற்குழு கூட்டம் நேற்று (டிசம்பர் 1) சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. இனிமேல் இரட்டை தலைமைதான் அதிமுகவை வழிநடத்துகின்ற வகையில் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் எனவும், 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் ஆணையாளர்கள், பொன்னையன் கழக அமைப்புச் செயலாளர் பொள்ளாச்சி வி. ஜெயராமன்.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/8HEX2QZjTD
— AIADMK (@AIADMKOfficial) December 2, 2021
மற்றும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 3.12.2021 வெள்ளிக் கிழமை முதல் 4.12.2021 சனிக் கிழமை (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை). அதே போன்று வேட்புமனு பரிசீலனை 5.12.2021- ஞாயிற்றுக் கிழமை காலை 11.25 மணி வரை. வேட்புமனு திரும்பப் பெறுதல், 6.12.2021 திங்கட் கிழமை மாலை 4 மணி வரை. தேர்தல் நாள்: 7.12.2021- செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் 8.12.2021 புதன் கிழமை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Twiter
Image Courtesy: Puthiyathalamurai