தமிழகம், புதுவையில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியுள்ளது.
அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை செய்து வரும் வேளையில், தேர்தல் ஆணையமும் தனது பணியினை வேகமாக செய்து வருகிறது.அதன்படி இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர் தங்கள் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்கலாம். ஆன்லைன் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். இதற்கான நேரம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கொடுக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவின் போது இரண்டு நபர்கள் மட்டுமே உடன் செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.