தேர்தலை முன்னிட்டு நெல்லையில் அதிநவீன ஆயுதங்களுடன் போலீசார் ஊர்வலம்.!

நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் அதிநவீன கண்ணீர் புகை குண்டு வீசக்கூடிய ஆயுதங்களுடன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைபிரிவுடன் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

Update: 2021-03-20 03:03 GMT

நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் அதிநவீன கண்ணீர் புகை குண்டு வீசக்கூடிய ஆயுதங்களுடன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைபிரிவுடன் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இந்த அணிவகுப்பு டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆரம்பித்து நான்கு ரதவீதிகள் தொண்டர் சன்னதி வழியாக சென்று சாலியர் தெரு பாறையடி வரை அணிவகுப்பு நடத்தப்பட்டது.


 



இதனிடையே பாறையடி ஊர் பொதுமக்களிடம் அச்சமின்றி அனைவரும் வாக்களிக்கும் விதமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த அணி வகுப்பில் டவுன் உட்கோட்டம் காவல் உதவி ஆணையாளர் சதீஷ்குமார், ஆயுதப்படை காவல் உதவி ஆணையாளர் முத்தரசு, டவுன் நிலைய காவல் ஆய்வாளர் இராமேஸ்வரி உட்பட காவலர்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

எதிர்பாராமல் தீடீரென்று போலீசார் ஆயுதங்களுடன் சாலையில் சென்றதை பார்த்த மக்களுக்கு பயந்து விட்டனர். எங்கே ஆவது பிரச்சனை ஏற்பட்டுவிட்டதால்தான் போலீசார் ஊர்வலம் செல்கின்றனர் என மக்கள் பேசிக்கொண்டனர்.

Similar News