ஏப்ரல் கடைசியில் தேர்தல்: ஆணையரிடம் கோரிக்கை வைத்த அ.தி.மு.க.?

ஏப்ரல் கடைசியில் தேர்தல்: ஆணையரிடம் கோரிக்கை வைத்த அ.தி.மு.க.?

Update: 2021-02-10 16:12 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் இறுதியில் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக கோரிக்கை வைத்துள்ளது. 2 நாள் அலுவல் பணி காரணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கொண்ட குழு இன்று தமிழகத்திற்கு வருகை புரிந்தது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சுசில் சந்திரா, உமேஷ் சின்ஹா, ராஜ்குமார் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு வந்துள்ளது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தது.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் கடைசியில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் அதிமுக சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கொரோனா பரவல் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. இதற்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தேர்தல் 2 கட்டங்களாக அல்லது 3 கட்டங்களாக நடத்தவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் இருப்பதால் அதிகளவு கூட்டத்தை சேர்க்காமல் இருப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என ஆலோசனையில் பேசப்பட்டுள்ளது.
 

Similar News