எண்ணூர் சட்டமன்ற தொகுதியில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு.!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி (ஏப்ரல்) நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி (ஏப்ரல்) நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
அதே போன்று சென்னை எண்ணூர் பகுதியில் வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிப்பதற்காக இன்று துணை ராணுவம் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இந்த நிகழ்வில் காவல் உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.