தமிழக மக்களுக்காக என் உயியே போனாலும் கட்சி தொடங்குவதில் பின் வாங்க மாட்டேன்.. ரஜினி பரபரப்பு பேட்டி.!

தமிழக மக்களுக்காக என் உயியே போனாலும் கட்சி தொடங்குவதில் பின் வாங்க மாட்டேன்.. ரஜினி பரபரப்பு பேட்டி.!

Update: 2020-12-03 14:04 GMT

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் ட்விட்டரில் கூறியதாவது: ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு.. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும் என கூறியுள்ளார்.


இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு என தீர்க்கமாக தெரிவித்தார். மேலும், என் பாதையில் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. அது நடக்கும் எனத் தெரிவித்தார்.


கடந்த 2017ம் ஆண்டே 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக நான் கூறியிருந்தேன். மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன்.


கொரோனா தொற்று காரணமாக என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால் எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. கொரோனாவை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை.


மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாக என்னால் மக்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை. தமிழக மக்களின் பிரார்த்தனையால் தான் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து திரும்பி உயிரோடு வந்தேன்.


தமிழக மக்களுக்காக எனது உயிரே போனாலும் பரவாயில்லை. அரசியல் மாற்றம் மிக மிக முக்கியம். கட்டாயம் என்பதால் கட்சி துவங்குகிறேன். கொடுத்த வாக்கில் இருந்து நான் ஒருபோதும் மாறப்போவதில்லை. கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் அய்யாவை நியமித்துள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News