பரபரப்பு: முதலமைச்சர் கூட்டத்தில் துப்பாக்கியுடன் சுற்றிய நபர்.!
பரபரப்பு: முதலமைச்சர் கூட்டத்தில் துப்பாக்கியுடன் சுற்றிய நபர்.!;
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதே போன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற சென்னை அரக்கோணம் சாலை பேர்ணாம்பட்டு பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் துப்பாக்கி, குண்டுகளுடன் சுற்றித் திரிந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் ஆயுதங்களும் பல நம்பர் பிளேட்டுகளும் இருந்ததாக காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர்.
முதலமைச்சர் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை முதலமைச்சரை கொல்வதற்கு திட்டம்போட்டு துப்பாக்கி எடுத்து வந்தாரா அல்லது வேறு யாரையாவது கொல்வதற்கு வந்தாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.