சசிகலா ஒரு வேலைக்காரி.. அ.தி.மு.க.விற்கும் அவருக்கும் தொடர்பு இல்லை: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு.!

சசிகலாவுக்கும், அதிமுகவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கூறினார். அவர் எத்தனை பேரிடம் பேசினாலும் கவலையில்லை எனக் கூறினார்.

Update: 2021-06-30 09:46 GMT

அரசியலை விட்டு ஒதுங்கியிருப்பதாக கூறிய சசிகலா, சில நாட்களாக அதிமுகவை வழிநடத்துவதாக சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் செல்போன் மூலமாக பேசி வருகிறார். அவர் பேசிய ஆடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகின்றனர். இவரது செயல் அதிமுக தலைவர்களிடம் எரிச்சலை உண்டாக்கியுள்ளது.




 


இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுக்கும், அதிமுகவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கூறினார். அவர் எத்தனை பேரிடம் பேசினாலும் கவலையில்லை எனக் கூறினார்.


 



இந்நிலையில், சசிகலா ஆடியோ விவகாரம் பற்றி கருத்து கூறியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சசிகலா என்பவர் யார்? அவர் அம்மா வீட்டில் வேலைக்காரியாக இருந்தார். வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார். எனவே அதிமுக கட்சிக்கும் சசிகலாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதிமுக யாரோட தயவிலும் இல்லை எனக்கூறினார்.

Similar News