'சதுரங்க போட்டிக்கு மட்டும் செலவு, ஏன் கருணாநிதி பேனாவிற்கு செய்ய கூடாது' - சுப.வீரபாண்டியனின் தாறுமாறு விளக்கம்

'தற்பொழுது நடக்கும் சதுரங்க விளையாட்டு போட்டிக்கு செலவு செய்கிறார்களே அதுபோலத்தான் கருணாநிதி பேனாவின் சிலைக்கும் செலவு செய்வது' என தி..தி.மு.க'விற்கு ஆதரவாக அறிக்கையை விடுத்துள்ளார் சுப.வீரபாண்டியன்.

Update: 2022-08-01 12:53 GMT

'தற்பொழுது நடக்கும் சதுரங்க விளையாட்டு போட்டிக்கு செலவு செய்கிறார்களே அதுபோலத்தான் கருணாநிதி பேனாவின் சிலைக்கும் செலவு செய்வது' என தி.மு.க'விற்கு ஆதரவாக அறிக்கையை விடுத்துள்ளார் சுப.வீரபாண்டியன்.

சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு, மக்கள் வரிப்பணத்தில் இது தேவையா என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அதற்கு ஆதரவு தரும் விதமாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் சுப.வீரபாண்டியன் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, 'ஏதேனும் ஒன்றை தேடிப் பிடித்து தமிழக அரசுக்கு எதிராக, தி.மு.க'விற்கு எதிராக கொண்டு வந்து நிறுத்தி விட வேண்டும் என்பதில் ஒரு கூட்டம் எப்பொழுதும் கவனமாக இருக்கிறது. கருணாநிதி நினைவிடத்திற்கு பேனா அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத பட்சத்தில் அதனை பொறுக்க முடியாத சிலர் இப்பொழுது புலம்பத் துவங்கி விட்டனர்' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'இந்த பேனா சிலைக்கு 80 கோடி ரூபாய் செலவா என கேட்பவர்கள் பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு முதல்வர் ஆற்றிய 9 நிமிட உரை தமிழ்நாட்டுக்கு ஒன்பதாயிரம் கோடி ஜி.எஸ்.டி தொகை கொண்டு வந்தது குறித்து பேச மாட்டார்கள். ஒரு அரசு என்றால் பல்வகைப் பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இதோ இப்போது நடந்து கொண்டிருக்கும் உலக அளவில் சதுரங்க விளையாட்டு போட்டிக்கு ஏன் இவ்வளவு செலவு என கேட்பது சரியா அதுபோலத்தான் விளையாட்டு, இசை, கலை, இலக்கியம் என எல்லாவற்றிற்கும் அரசு அனைத்து செலவு செய்யும். பேனா என்பது குறியீடு கலை இலக்கிய ஆர்வத்தை தூண்டுவது' என தனது முகநூல் பக்கத்தில் கருணாநிதி பேனா சிலை அமைப்பது தவறு இல்லை என்ற வகையில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் அவர் குறிப்பிட்டது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.


Source - Asianet News

Similar News