உங்க முதுகிலேயே ஆயிரம் அழுக்கு இருக்கு! பா.ஜ.க. பற்றி பேச ஜோதிமணிக்கு என்ன தகுதி இருக்கு-சூடு போடும் பாத்திமா அலி!

பாஜக பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு என்ன தகுதி இருக்கு என்று பாத்திமா அலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-08-29 10:47 GMT

பாஜக பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு என்ன தகுதி இருக்கு என்று பாத்திமா அலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் குறித்து பொய்யான வீடியோவை பத்திரிகையாளர் மதன் என்பவர் வெளியிட்டார். இதனை கே.டி.ராகவன் மறுத்தது மட்டுமின்றி இதனை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று தனது சமூக வலைதளம் மூலம் கருத்து பதிவிட்டிருந்தார். அது மட்டுமின்றி தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதனிடையே காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மற்றும் கே.டி.ராகவன் குறித்தும் தவறான குற்றச்சாட்டை முன்வைத்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கற்பனையான கதைகளை அள்ளி வீசினார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் தமிழக தலைவர் பாத்திமா அலி பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள் பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களாக தமிழக பாஜக பற்றியும் அதன் தலைவர் அண்ணாமலை பற்றியும் தவறான செய்திகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் பாஜக பற்றியோ அதன் தலைவர் அண்ணாமலை பற்றியோ பேசக்கூடிய தகுதியற்றவர்கள். கே.டி.ராகவன் செய்தது தனிமனித ஒழுக்கம். அவர் கட்சி பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். அவர் மீது கட்சி உரிய விசாரணை நடத்தும். அந்த தனிமனித ஒழுக்கத்தை கொண்டு வந்து கட்சியில் இருக்கக்கூடிய அனைத்து பெண்களையும் தவறாக பேசுவதும், கட்சி தலைவராக இருக்கக்கூடிய அண்ணாமலை குறித்து தவறாக பேசுவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த விவகாரத்தில் சம்மந்தம் இல்லாமல் காங்கிரஸ் ஜோதிமணி மற்றும் சிலர் பேசுகின்றனர். ஜோதிமணி காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு மாநில தலைவர் அண்ணாமலை குறித்து தவறாகவும், இழிவாகவும் பேசிக்கொண்டிருக்கிறார். இவ்வளவு வாய்கிழிய பேசும் நீங்கள் பெரியகருப்பன் விஷயம் பற்றி ஏன் பேசவில்லை. அவரை திரும்பவும் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சராக தேர்வு செய்துள்ளனர்.

இதை பற்றி வாய் திறக்காமல் மவுனம் காப்பவர்கள் ஏன் தவறு செய்தாத அண்ணாமலையை பற்றி பேச வேண்டும். ஜோதிமணி பாஜகவில் மகளிருக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார் கொடுத்துள்ளார். பாஜகவில் உள்ள அனைத்து பெண்களும் மிகவும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதில், யாரோ ஒன்று இரண்டு பேர் தன்னுடைய சொந்த சுயநலத்துக்காக செய்த காரியத்தால் கட்சி பொறுப்பேற்காது.

மேலும், கட்சி தலைவர் எதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார். பாஜகவில் இருக்கும் அனைத்து பெண்கள் மீதும் தலைவர் அண்ணாமலை மீதும் சேற்றை வாரி இறைக்க இவர்களுக்கு யார் உரிமை அளித்தது. இவர்கள் முதுகிலேயே ஆயிரம் அழுக்கை வைத்து கொண்டு பாஜக பற்றி பேசுவது சரியில்லை. நீங்கள் காங்கிரசில் மாநிலத் தலைவர் ஆக வேண்டும் என்று நினைத்தால், அதற்கு பாஜகவை பயன்படுத்துவதா.

உங்கள் மீதே பல விதமான பாலியல் அவதூறு இருக்கும் நிலையில், நீங்கள் பாலியல் அவதூறு இல்லாத கட்சிக்கு நேர்மையாக நடந்து கொண்டிருக்கும் ஒரு தலைவரை பற்றி நீங்கள் தவறாக பேசுவதும், புகார் கூறிவதையும் நிறுத்தி கொள்ள வேண்டும் என பாத்திமா அலி எச்சரித்துள்ளார்.

Source, Image Courtesy: Asianet

https://tamil.asianetnews.com/politics/bjp-fathima-ali-slams-joythi-mani-qylff9

Tags:    

Similar News