தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எத்தனை பேர் போட்டி.. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!
இதன் பின்னர் 4,468 வேட்புமனுக்களில் 444 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது.
இந்த தேர்தலில் 7,255 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே வேட்புமனு பரிசீலனையில் 2,787 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னர் 4,468 வேட்புமனுக்களில் 444 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன.
இந்நிலையில், 4,024 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நிலையில், இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதில் சுயேட்ச¬ வேட்பாளர்கள் ஏராளமானோர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.