உள் கட்டமைப்புகளுக்கு கூடுதல் நிதி: பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் நிதியமைச்சர் தகவல்!

Update: 2022-02-28 12:52 GMT

சென்னை, கிண்டியில் தூர்தர்ஷன் சார்பில் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீதான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எல்.முருகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு துறை சார்பில் வல்லுநர்கள் கலந்துரையாடினர். முன்னதாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், நாட்டின் பொருளாதா கொள்கைகள் பற்றியும், நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு துரை சார்ந்த வல்லுநர்களின் கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தார்.

மேலும், ஒரு இயந்திரத்திற்கு எப்படி உராய்வுக்கு எண்ணெய் தேவைப்படுகிறதோ அதே போன்றுத்தான் அரசு நிர்வகிக்க வரி தேவைப்படுகிறது. அது எங்கே செல்கிறது, யாருக்கு செல்கிறது என்பதைவிட அதனால் அரசு இயந்திரம் சரியாக செயல்படுகின்றதை பார்க்க வேண்டும். அதே சமயம் முன்னர் பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக செலவழிக்கப்பட்டுள்ளது எனவும், மாநிலங்களுக்கு ஒதுக்கிய நிதியும் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதால், இந்த முறை கூடுதலாக நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Source,Image Courtesy: Twiter

Tags:    

Similar News