"பெட்ரோல், டீசல் வரியை குறைக்க முடியாது வருடத்திற்கு 1,050 கோடி இழப்பு ஏற்படும்" - நிதியமைச்சர் தியாகராஜன் !

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் மாதான வரியை உடனடியாக குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சி அமைந்து 6 மாதங்களை கடந்தும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காமல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

Update: 2021-11-20 04:23 GMT

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 100ஐ கடந்து சென்றது. இதனால் மத்திய அரசு அதிரடியாக வரியை குறைத்து உத்தரவிட்டது. இதனால் 90 முதல் 95 ரூபாய் வரை குறைந்தது. இதில் மாநில அரசுகள் தங்களின் பங்குகளுக்கு வருவாயை குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது. அதன்படி கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திர பிரதேஷம், அரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களும் மாநில அரசு வரியை குறைத்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை அம்மாநிலங்களில் குறைவாக விற்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் மாதான வரியை உடனடியாக குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சி அமைந்து 6 மாதங்களை கடந்தும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காமல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக திமுகவை சேர்ந்த நிதியமைச்சர் தியாகராஜன் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். வரியை குறைத்தால் வருடத்திற்கு 1,050 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என கூறியுள்ளார். இவரது அறிவிப்பு தமிழக மக்களிடம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News