'பேனரில் எனது பெயர், படம் ஏன் போடலை' சிகிச்சை மையத்தை திறக்க விடாமல் தடுத்த தி.மு.க. நகர்மன்றத் தலைவர்!

Update: 2022-05-02 13:42 GMT

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக முதலுதவி சிகிச்சை மையம் திறப்பு விழாவில், ஃபிளக்ஸில் தனது பெயர், புகைப்படத்தை ஏன் போடவில்லை என்று அறநிலையத்துறை மற்றும் எம்.எல்.ஏ.விடம் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் வாக்குவாதம் செய்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் பக்தர்களுக்காக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு நேற்று நடைபெற்றது. இதனையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிகிச்சை மையத்திற்கு வெளியில் பிளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர் பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்டவர்களின் பெயர் மட்டும் இருந்தது.

இந்நிலையில், எம்.எல்.ஏ., காதர்பாட்சா முதலுதவி சிகிச்சை மையம் திறப்பதற்காக வந்தார். அவருடன் ராமேஸ்வரம் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் நாசர்கான் வந்திருந்தார். அப்போது கோயில் அறநிலையத்துறையினரிடம் விழா பிளக்ஸ் பேனரில் ஏன் எனது பெயர் மற்றும் படம் போடவில்லை என்று வாக்குவாத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதனால் சிகிச்சை மையம் திறப்பு விழா மூன்று மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ஆனது. இதன் பின்னர் எம்.எல்.ஏ., காதர் பாட்ஷா தி.மு.க. நகர்மன்றத் தலைவரிடம் சமாதானம் பேச முற்பட்டார். ஆனாலும் அதனை கேட்கவில்லை, நான் ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் எனது பெயர் எப்படி இடம் பெறவில்லை. தன்னை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு ஒரு முடிவு கட்டிவிட்டு நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று கறார் காட்டினார். இதனால் விழாவுக்கு வந்திருந்தவர்கள் மண்டை காய்ந்தனர். அதன் பின்னர் பழைய பேனரில் நகர்மன்றத் தலைவரின் பெயர் இருந்ததை கொண்டு வந்து மாட்டினர். இதன் பின்னரே நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தார்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News