வெள்ளத்தில் மிதக்கும் முதலமைச்சர் தொகுதி: படகில் பயணம் செய்ய ரூ.50 கட்டணம் ! கொள்ளதூரில் அவலம்!

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. அதே போன்று குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் வெளியில் வருவதற்கு மிகவும் சிரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Update: 2021-12-01 11:13 GMT

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. அதே போன்று குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் வெளியில் வருவதற்கு மிகவும் சிரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


அதே போன்று சென்னை, கொளத்தூர் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் கடந்த 6 நாட்களாக மழை வெள்ளத்தில் விவிஐபி தொகுதியே மிதக்கிறது. அதன்படி கொளத்தூரில் உள்ள ஜவகர் நகர், ஜிகேஎம் காலனி, அகரம், ராம்நகர், பூம்புகார் நகர், திருவிக நகர், லட்சுமிநகர், கே.சி. கார்டன், கார்த்திகேயன் நகர், எஸ்.ஆர்.பி. கோயில் தெருக்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.


அதே போன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி அலுவலகம் முன்புறமும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் சுமார் 3 அடிக்கும் மேல் மழைநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் படகில் பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.


அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளுக்கு செல்ல படகில் செல்வதற்கு ரூ.50 கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எப்போதுதான் இந்த மழைநீரை அகற்றுவார்களா என பொதுமக்கள் ஏங்கி தவிக்கின்றனர். சொந்த தொகுதியில் மழைநீரை அகற்றாமல் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News