பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது மகன் உதயநிதிதான் முக்கியம், மக்கள் அல்ல - இறங்கி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி

பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு குடும்பம் தான் முக்கியம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2022-12-30 06:11 GMT

பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு குடும்பம் தான் முக்கியம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சேலம் ஜாகிர் அம்மா பாளையத்தில் அ.தி.மு.க'வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சியின் விழா நடைபெற்றது. அப்பொழுது பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, '8 வழி சாலை அமைக்க கூடாது என வேண்டுமென்று விவசாயிகளை தி.மு.க தூண்டிவிட்டது. மொத்தம் 8 சதவீத விவசாயிகள் தான் எங்களது நிலம் பாதிக்கப்படுகிறது என போராட்டத்தில் ஈடுபட்டார்கள் 92 சதவிகிதம் பேர் நிலம் கொடுப்பதற்காக தயாராக இருந்தார்கள். ஆனால் இப்போது 8 வழி சாலை திட்டம் வேண்டும் என தி.மு.க அமைச்சர் ஏ.வ.வேலு கூறுகிறார்.

ஒரு திட்டத்தை கொண்டு வருகிற போது வேண்டும் என்றே திட்டமிட்டு தி.மு.க தடுப்பது, பிறகு தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டம் நல்ல திட்டம் எனக் கூறி கொண்டு வருவதற்கு முயற்சி செய்வது, இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் அரசு பணம்தான் வீணாகிறது.

இதுதான் தி.மு.க ஆட்சி, இதுதான் திராவிட மாடல் ஆட்சி! ஆட்சிக்கு வந்து இருபது மாதம் முடிந்து விட்டது. ஜனவரி 7ஆம் தேதி உடன் 20 மாத ஆட்சி முடிவடைகிறது மூன்றில் ஒரு பாக ஆட்சியை முடித்து விட்டார்கள். இந்த 20 மாத கால ஆட்சியில் என்ன செய்தீர்கள்? எம்.பி'க்கள் கொண்டு வந்த திட்டம் என்ன என கேள்வி எழுப்பினர்? மேலும் முதல்வர் ஸ்டாலின் பொம்மை முதல்வராக உள்ளார், அவருக்கு குடும்பம் தான் முக்கியம். தனது மகன் உதயநிதிக்கு முடி சூட்டு விழா நடத்தி உள்ளார் இதை மக்கள் உணர வேண்டும்' என பேசியதும் பரபரப்பு ஏற்படுத்தியது.


Source - Dinamalar

Similar News