மேற்கு வங்கத்தில் வனத்துறை அமைச்சர் ராஜினாமா.. முதலமைச்சர் மம்தாவுக்கு மற்றொரு அதிர்ச்சி.!
மேற்கு வங்கத்தில் வனத்துறை அமைச்சர் ராஜினாமா.. முதலமைச்சர் மம்தாவுக்கு மற்றொரு அதிர்ச்சி.!
மேற்குவங்க மாநில வனத்துறை அமைச்சர் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த கடிதத்தை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு திடீரென்று வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி அதிர்ச்சியை கொடுத்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில ராஜீப் பாஜர்ஜி எம்.எல்.ஏ.வாக தேர்வாகி அந்த மாநிலத்தில் அமைச்சர் பதவியை பெற்றார். முதலமைச்சர் மம்தாவுக்கும் ராஜீவ் பானர்ஜிக்கும் சில மாதங்களாவே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக மம்தாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வனத்துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் நான் எனது பதவியை ராஜினாமா செய்வதை இதன் மூலம் தெரிவிக்கிறேன். மேற்கு வங்க மக்களுக்கு சேவை செய்வது என கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கு மிகவும் நன்றி. எனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கூடாரம் காலிகாகி வருகிறது. இதனால் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க மேற்கு வங்கத்தில் இந்த தடவை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த மாநிலத்தில் மும்முனை போட்டி நடைபெற வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.