முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் ரெய்டு!

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர் சி.விஜயபாஸ்கர். இவர் அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக இவர் மீது திமுக குற்றம்சாட்டி வந்தது.

Update: 2021-10-18 02:45 GMT

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர் சி.விஜயபாஸ்கர். இவர் அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக இவர் மீது திமுக குற்றம்சாட்டி வந்தது.

இந்நிலையில், சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இவருக்கு தொடர்புடைய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சுமார் 43 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியான சோதனைகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அதிமுக தலைமை ஏற்கனவே கண்டனங்களை பதிவிட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இது போன்ற சோதனைகள் நடத்தப்படுகிறது என்று கூறியது. தற்போது மீண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தி வருவது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source: Dinakaran

Image Courtesy:Maalaimalar

Tags:    

Similar News