அடிதடியில் ஈடுபட்ட தி.மு.க. எம்.பி.யை கைது செய்யாமல், தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை கைது செய்த போலீஸ் !

பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்.பி.யை கைது செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2021-10-10 07:23 GMT

பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்.பி.யை கைது செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தர்ணாவில் ஈடுபட்டார். நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே ஆவரைக்குளத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் பாஸ்கரை, திருநெல்வேலி திமுக எம்.பி. ஞானதிரவியம் மற்றும் அவரது கட்சியினர் ஒன்றாக சேர்ந்து ஓட்டலில் வைத்து பலமாக தாக்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் எம்.பி.யும் அவரது ஆட்களும் பறித்து சென்றுள்ளனர். இதனால் காயமடைந்த பாஜக பிரமுகர் பாஸ்கர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவரை முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.

இந்நிலையில், பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்.பி. ஞானதிரவியம் மீது உடனடியாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு நெநல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை முன்பு கட்சியினருடன் தர்ணாவில் ஈடுபட்டார். அங்கு வந்த போலீசார் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சட்டப்பிரிவு 307ன் கீழ் வழக்குப்பதிவு செய்து திமுக எம்பியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் போலீசாரிடம் கூறினார். 


இதனால் திமுக அரசுக்கு சாதகமாக மாறிய போலீசார் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது கட்சியினரை கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்தது. அவர் அங்கு தரையில் படுத்து தூங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், பணகுடி காவல் நிலைத்தில் திமுக எம்.பி. ஞானதிரவியம் மற்றும் அவரது மகன்கள் தினகரன் ராஜா உள்பட 30 பேர் மீது 147, 294 (பி) 323, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆளும் கட்சியான திமுக எம்.பி.க்களே பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது கொலை செய்யும் முயற்சியில் அடிதடியில் ஈடுபட்டு வருவது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Bjp Tamilnadu Twiter

Tags:    

Similar News