திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி அப்பல்லோவில் அனுமதி.!

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி அப்பல்லோவில் அனுமதி.!;

Update: 2021-02-06 17:08 GMT

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகியாகவும் பொன்முடி இருந்து வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக பணியாற்றி வந்துள்ளார்.

பித்தப்பை பாதிப்பால் கடந்த சில நாட்களாக அவதியுற்று வந்துள்ளார். உடல்நிலை மிகவும் மோசமானதால் பொன்முடி குடும்பத்தார் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோவில் அனுமதித்துள்ளனர்.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் மருத்துவமனையில் திமுகவினர் குவிந்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் திமுக நிர்வாகிக்கு உடல்நிலை பாதிப்பு அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Similar News