ரஜினியால் விரக்தி.. அரசியலை விட்டு விலகும் தமிழருவி மணியன்.?

ரஜினியால் விரக்தி.. அரசியலை விட்டு விலகும் தமிழருவி மணியன்.?

Update: 2020-12-30 08:12 GMT

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நேற்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு அவரது நிர்வாகிகள் மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் ரஜினியை நம்பி பெரிய கட்சியில் இருந்து விலகி சென்ற அர்ஜுன மூர்த்திக்கு நன்றி தெரிவித்தார். இதனிடையே காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்த தமிழருவி மணியனும் ரஜினி கட்சி ஆரம்பிக்க முக்கிய பங்காற்றியவர் என்பது அனைவரும் அறிந்ததே. மற்றவர்களை விட தமிழருவி மணியனுக்கு மிகுந்த மனவருத்ததை அளித்தது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்குவேன் என அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்திருந்தார். தமிழருவி மணியன் கூறியிருப்பதாவது: இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை.

திமுகவில் இருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன், வரமாட்டேன். 2 திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் பொதுவாழ்க்கைப் பண்புகள் பாழடைந்து விட்டன. மக்கள் நலன் சார்ந்த மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என கனவு கண்டேன்.

காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் குற்றம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இவரது கருத்து அனைவருக்கும் புரியும்படி அழகாக தெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News