'கெட் ரெடி போக்ஸ்' - 2024 தேர்தல் குறித்து கமலாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தும் அண்ணாமலை
மக்களவைத் தேர்தல் குறித்து பா.ஜ.க தலைவர்களுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
மக்களவைத் தேர்தல் குறித்து பா.ஜ.க தலைவர்களுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை தொடர பா.ஜ.க'வும் ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகளும் பல தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன.
இந்நிலையில் மாநில அளவில் பா.ஜ.க கூட்டணி குறித்தும் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட தலைவர்களுடன் இன்று அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கமலாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு கமலாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.