பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி வேட்புமனுத்தாக்கல்.!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளை பெற்று போட்டியிடுகிறது. இதனிடையே தமிழகம் முழுவதும் இன்று அதிமுக, பாமக கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளை பெற்று போட்டியிடுகிறது. இதனிடையே தமிழகம் முழுவதும் இன்று அதிமுக, பாமக கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பாமக தலைவர் ஜி.கே.மணி தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று பென்னாகரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனுத்தாக்கலுக்கு முன்னர் கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.