கோவாவில் காலியான காங்கிரஸ் கூடாரம் - காரணம் என்ன?
கோவாவில் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் உள்ளிட்ட 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பா.ஜ.கவில் இணைந்துள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் தற்பொழுது முன்னாள் காங்கிரஸ் தலைவர் காந்தி தலைமையில் இந்தியா ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான இந்த பாதுகாப்பை பயணத்தின் மூலம் காங்கிரஸ் பக்கம் அனைத்து மக்களையும் இருக்கும் ஒரு முயற்சியை கையில் எடுத்து வருகிறார். ஆனால் மறுபக்கம் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல்வேறு மூத்த தலைவர்கள் உட்பட பலரும் பாரதிய ஜனதாவிற்கு மாறிவிடுகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் 8 புதிய நபர்கள் இணைந்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் உட்பட 8 எம்.எல்.ஏக்கள் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சிகளில் இணைந்துள்ளார்கள். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மாறி இருப்பது கட்சிக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த இருக்கிறது.
பா.ஜ.கவில் இணைந்த 8 எம்.எல்.ஏக்களையும் மனதார வரவேற்கிறேன் என்று சாவந்த் கூறினார்.காங்கிரஸ் கட்சி சார்பில் தற்பொழுது 'பாரத் ஜோடோ யாத்ரா' தொடங்கியுள்ளது. ஆனால் 'காங்கிரஸ் சோடோ யாத்ரா' கோவாவில் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். நாடு முழுவதும் உள்ள மக்கள் காங்கிரஸை விட்டு வெளியேறி பா.ஜக.வில் சேருகிறார்கள் என்றும் சாவந்த் கூறியுள்ளார்.
Input & Image courtesy: News