கோவா: பா.ஜ.கவில் இணைந்த காங்கிரஸ் 8 எம்.எல்.ஏ'க்கள் மோடியை சந்திக்கிறார்கள்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.கவிற்கு இணைந்த 8 கோவாவை சேர்ந்த MLAக்கள் நரேந்திர மோடி இன்று சந்திக்கிறார்கள்.

Update: 2022-09-20 02:06 GMT

காங்கிரசுக்கு சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்தியாவை ஒன்றிணைப்போம் என்ற பெயரில் யாத்திரை பயணம் ஒன்று மேற்கொண்டுள்ளார். ஆனால் இந்த யாத்திரை பயணத்தில் பல்வேறு காங்கிரஸ் கட்சி தலைவர்களில் இருந்து பல்வேறு எம்எல்ஏக்கள் வரை பலரும் பா.ஜ.கவிற்கு தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கோவை கோவாவில் இருந்த எட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தற்போது பா.ஜ.கவிற்கு மாறியுள்ளார்கள்.


மேலும் இவர்கள் கடந்த மாதம் 14ஆம் தேதி பா.ஜ.கவில் இணைந்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் திகாம்பர் காமத் இப்படை எட்டு முக்கியமான எம்எல்ஏக்கள் தற்போது பா.ஜ.கவிற்கு இணைந்துள்ளார்கள். எனவே கடந்த மாத பா.ஜ.கவில் இணைந்து இந்த எட்டு எம்எல்ஏக்களும் தற்போது டெல்லியில் உள்ள பிரதமரை பார்ப்பதற்கு இன்று சென்று இருக்கிறார்கள்.


பா.ஜ.கவில் இணைந்ததன் பெயரில் இன்று அவர்கள் பிரதமரை சந்திப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மைக்கேல் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள், கோவா முதல்வர் பிரமோத் தாவுடன் டெல்லி சென்று இருக்கிறார்கள். அவர்களுடனேகூட பா.ஜ.க மாநில தலைவரும் சென்று இருக்கிறார். இன்று பிரதமரை சந்தித்து பல்வேறு தகவல்கள் பற்றி பேச இருக்கிறதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News