தாலிக்கு தங்கம்.. சேலத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.!
தாலிக்கு தங்கம்.. சேலத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.!
சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு மாவட்டம் தோறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் செல்லும் போது மக்கள் நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.
அந்த வகையில் இன்று சேலம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் இந்த ஆண்டுக்கான திருமண நிதி உதவி, ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார். இதனையடுத்து மற்ற பயனாளிகளுக்கும் தாலிக்கு தங்கம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், எம்.எல்.ஏக்கள் வெங்கடாசலம், வீரபாண்டி மனோன்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.