பயணிகளை அம்போனு விட்டுவிட்டு! முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட அரசு பேருந்துகள்!
கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (22ம் தேதி) வருகை புரிந்தார். அவர் வருகையை முன்னிட்டு அரசு பேருந்துகள் அனுப்பப்பட்டது. இதனால் பல ஆயிரம் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாக்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (22ம் தேதி) வருகை புரிந்தார். அவர் வருகையை முன்னிட்டு அரசு பேருந்துகள் அனுப்பப்பட்டது. இதனால் பல ஆயிரம் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாக்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் வருகை புரிந்தார். அவர் வருகையை முன்னிட்டு ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் திமுகவினர் அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி, கல்லூரி பேருந்துகளில் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனால் கோவைக்கு வந்த வேறு மாவட்ட மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பேருந்துக்காக பல மணி நேரம் பேருந்து நிலையங்களில் காத்துக்கிடந்தனர். அது மட்டுமின்றி பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்களுக்கும் பேருந்து இல்லாமல் அவதியுற்றதாக பயணிகள் கருத்து தெரிவித்தனர்.
இது போன்று அரசு நிகழ்ச்சியோ அல்லது, கட்சி நிகழ்ச்சிகளோ பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராமல் நடத்தியிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. திமுகவினர் சுமார் ஒரு லட்சம் பேர் கோவையில் திரண்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டார். இதற்காக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகளும் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar