'உக்ரைன் போன்றே இலங்கைக்கு உதவி கிடைக்க இந்திய அரசு வழி செய்யும்' - அண்ணாமலை

'உக்ரைன் போன்றே இலங்கைக்கு உதவி கிடைக்க இந்திய அரசு வழி செய்யும்' - இலங்கையில் இருந்து திரும்பிய அண்ணாமலை உறுதி

Update: 2022-05-04 07:45 GMT

இந்தியாவின் பாதுகாப்பை இலங்கை உணர வேண்டும் என இலங்கை சுற்றுப்பயணம் சென்ற அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பணியாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மே தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றார். 4 நாள் பயணத்தில் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் ஆய்வு செய்து வந்தார், இந்நிலையில் 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று தமிழகம் திரும்பிய அண்ணாமலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'இலங்கையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை டாலர் அதற்கு தீர்வு கொடுப்பதற்காக நமது நாடு கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது.

ஒன்றரை மில்லியன் டாலர் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து உதவியாக சென்றிருக்கிறது அவசரகால உதவியாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சார்பில் மருத்துவம் மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இலங்கையில் மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் சேர்க்க இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது உக்ரைனுக்கு கிடைத்த உதவி போன்றே இலங்கைக்கு உதவி கிடைப்பதற்கு இந்திய அரசு முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறது' என்றார்.

தமிழக அரசு செய்யக்கூடிய உதவிக்கு பாரதிய ஜனதா கட்சி உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார். முன்னதாக அண்ணாமலை இந்த பயணத்தின்போது இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்பினரை சந்தித்து அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.


Source - News 18 Tamil Nadu

Similar News