டெல்லிக்கு பொங்கல் வைக்க சென்ற ஆளுநர் - வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு உட்காந்திருக்கும் தி.மு.க
உச்சகட்ட பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில் தமிழக ஆளுநர் இன்று டெல்லி விரைகிறார்.
உச்சகட்ட பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில் தமிழக ஆளுநர் இன்று டெல்லி விரைகிறார்.
கடந்த சில நாட்களாகவே தமிழக ஆளுநர் மற்றும் தமிழக அரசு இரண்டு தரப்பிற்கும் இடையே பனிப்போர் சூழல் வெடித்து வருகிறது. குறிப்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரின் செயல்பாடுகள் தமிழக அரசை எதிர்ப்பதாக இருக்கின்றன என தி.மு.க அரசு குறை கூறிவரும் நிலையில் பாரம்பரியம், கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்றதே ஆ.என்.ரவி நிலைப்பாடாக உள்ளது.
அதிலும் குறிப்பாக தமிழ்நாடு என கூறாமல் இனி தமிழகம் என்று கூறவேண்டும் தேசிய ஒருமைப்பாடு தான் நமக்கு முக்கியம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவதும் தேசிய ஒருமைப்பாடு என்றாலே தொண்டையில் சாப்பிட்டது சிக்கிக்கொண்டது போல் தி.மு.க விழிப்பது இந்த பனிப்போர் சூழலுக்கு அச்சாணியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை தொடர் கூட்டத்தொடர் தொடங்கியது, இதில் முதல் உரை ஆளுநர் உரையுடன் துவங்கப்பட்டது. அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தொடரில் தி.மு.க அரசு எழுதிக் கொடுத்த உரையை படிக்காமல் அதில் உள்ள சில வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். தி.மு.க அரசு தவிர்த்த உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்து மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு சென்ற விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே தி.மு.க அரசு தரப்பில் மாநில உரிமைகளை ஆளுநர் பறிக்கிறார், நாங்கள் எழுதிக் கொடுத்ததை படிக்க மாட்டேங்கிறார், மரபை மீறிவிட்டார், ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் கைப்பாவையாக நடந்துகொள்கிறார் என குறை கூறியது மட்டுமல்லாமல் 'கெட் அவுட் ரவி' என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தது மட்டுமின்றி அன்று இரவே சென்னை மாநகர் முழுவதும் 'கெட் அவுட் ரவி' என்ற வாசகத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியது தி.மு.க தரப்பு.
அன்று மாலையிலேயே ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது, அந்த அறிக்கையில் தி.மு.க அரசு தயாரித்து கொடுத்த உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருக்கின்றன குறிப்பாக சட்டம் ஒழுங்கு குறித்த தகவலில் ஆளுநர் அவர்களுக்கு ஒப்புதல் இல்லை எனவும் கூறப்பட்டது. மேலும் இந்த உரையை மாற்ற கோரினால் அந்த உரை அச்சுக்கு போய்விட்டதால் மாற்ற முடியாது என கூறியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது, இதனால் அந்த தயாரிக்கப்பட்ட உரையை படிப்பதற்கு ஆளுநருக்கு ஒப்புதல் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.