காஞ்சிபுரத்தில் தேர்தல் விதி மீறல்: 2வது அரசு ஊழியர் சஸ்பெண்ட்.!

திமுக வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அது மட்டுமின்றி வேட்பாளருக்கு மாலை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார்.

Update: 2021-03-30 09:52 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே தேர்தல் விதிமீறல் தொடர்பாக 2வது ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர்கள் சிலர் திமுக வேட்பாளர்களுக்கு மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அது போன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தொகுதிக்குட்பட்ட திருப்புலிவனம் ஊராட்சி செயலாளராக உள்ளவர் சுபாஷ். இவர் திமுக வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அது மட்டுமின்றி வேட்பாளருக்கு மாலை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார்.


 



இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது பற்றி தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் அரசுப்பணியிலிருந்து, திருப்புலிவனம் ஊராட்சி செயலர் சுபாஷை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.

தற்போது திமுக வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்த 2வது செயலாளர் சஸ்பெண்ட் செய்தது அரசு ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News