தீபாவளிக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வது கட்டாயம் இல்லை: தி.மு.க. விளக்கம்!

இந்துக்கள் பண்டிகையான தீபாவளிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்வது என்பது கட்டாயம் இல்லை என்று திமுக செய்தித்தொடர்பாளர் இராஜீவ் காந்தி செய்தி இணையதளத்திற்கு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2021-11-15 09:36 GMT

இந்துக்கள் பண்டிகையான தீபாவளிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்வது என்பது கட்டாயம் இல்லை என்று திமுக செய்தித்தொடர்பாளர் இராஜீவ் காந்தி செய்தி இணையதளத்திற்கு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு தமிழகத்திற்கு அமைந்த பின்னர் இந்துக்கள் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. ஆனால் ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பிற மதங்களின் விழாக்களுக்கு மட்டும் ஒரு நாளுக்கு முன்பாகவே வாழ்த்து சொல்லி விடுவார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் இந்துக்கள் பண்டிகையின்போது எந்தஒரு கருத்தையும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிடுவார். இந்துக்கள் ஏன் தமிழக முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை என்று சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில், ஏன் திமுக வாழ்த்து சொல்வதில்லை என்ற கருத்தை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் இராஜீவ் காந்தி விளக்கம் அளித்துள்ளார். தீபாவளி என்ற பெயரில் புராணக் கதைகளின் மூலமாக குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவு செய்து கட்டுகின்ற கதைகளை பரப்பிக் கொண்டாடப்படும் விழாவுக்கு நாங்கள் எப்போதும் வாழ்த்து சொல்வதில்லை என்ற எங்களின் இயக்கத்தின் ஒரு கொள்கை முடிவாக வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Vikatan


Tags:    

Similar News