ஆன்மீகத்தை விட்டுவிட்டு திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார் ஜி.யு.போப் - ஆளுநர் ஆர்.என்.ரவி சாடல்

'ஆன்மீக கருத்துக்களை விட்டு விட்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் ஜி.யு.போப்' என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

Update: 2022-10-07 14:48 GMT

'ஆன்மீக கருத்துக்களை விட்டு விட்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் ஜி.யு.போப்' என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

குறள் சங்கத்தின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற திருக்குறள் உலகத்தில் முதல் நிலை என்ற நூலை வெளியிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, 'எதிர்த்து சத்தம் போடுகிறவர்களால் உண்மையை அழித்துவிட முடியாது' என்றார். 'ஆன்மீகம் மற்றும் நிதி சாஸ்திரங்கள் கலந்த திருக்குறளை வெறும் வாழ்க்கை புத்தகமாக காட்ட நினைப்பது ஏற்புடையது இல்லை' என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழில் சரளமாக பேசுகிற அளவுக்கு தமக்கு என்ன நம்பிக்கை ஏற்படவில்லை எனவும் 'ஆன்மீக கருத்துக்களை விட்டு விட்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் ஜி.யு.போப்' எனவும் கூறினார்.


Source - Polimer News

Similar News