சட்டமன்றத்தில் குட்கா: ஸ்டாலின் உட்பட 19 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு.!

சட்டமன்றத்தில் குட்கா: ஸ்டாலின் உட்பட 19 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு.!;

Update: 2021-02-10 08:32 GMT

சட்டப்பேரவையில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை எடுத்து சென்ற ஸ்டாலின் உட்பட அவரது கட்சியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பு இன்று உயர்நீதிமன்றம் வழங்க உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேவை நடைபெறும்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை உடன் எடுத்து சென்றனர்.

இந்த சம்பவம் பேரவையின் உரிமையை மீறிய செயல் என சபாநாயகர் பரிந்துரைத்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 23 எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸில் தவறு இருப்பதாக அதனை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், தவறுகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய நீதிமன்றம் கூறியது. அதனடிப்படையில் 2வது முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு எதிராக ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல். ஏக்களும் புதிதாக வழக்குகளை தொடர்ந்தனர்.

அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனை நீக்கக்கோரி சட்டப்பேரவைச் செயலாளர் மற்றும் பேரவை உரிமைக் குழுவில் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்நிலையில், இந்த தீர்ப்பு இன்று காலை 10:30 மணியளவில் வழங்கப்படவுள்ளது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோகுமா அல்லது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தீர்ப்பு வந்தபின்னர்தான் தெரியவரும்.
 

Similar News