வரதராஜ பெருமாள் கோயில் நிலத்தை தி.மு.க. அரசு தொடக்கூடாது - ஹெச்.ராஜா எச்சரிக்கை!
பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான சுமார் 31 ஏக்கர் நிலத்தை தொட்டால் போராட்டம் வெடிக்கும் என்று பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் அமைந்திருக்கும் அருள்மிகு திருக்கச்சி நம்பி மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஹெச்.ராஜா சாமி தரிசனம் செய்தார்.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை எடுத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசியதாவது: நாம ஏதோ கோயிலுக்கு போகிறோம், முடிஞ்சால் தட்டில் காசு போடுவோம் இல்லை எனில் பிரசாதமாக வாங்கி சாப்பிடுவோம். இதனிடையே நாம் போகும் கோயில்கள் சரியாக இருக்கிறதா, அதன் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றதா என்பதை கண்காணித்து அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அமைப்பு ஆகும்.
அடி மேல் அடி.அயோத்யா மண்டபம் விஷயத்தில் அறநிலையத்துறைக்கு அடி. தருமை ஆதீன பட்டிணப்பிரவேஷ விஷயத்தில் தமிழக அரசு அடிபணிந்தது. ஒன்றுபட்ட இந்து சக்தி வென்றுதீரும். இது சத்தியம்
— H Raja (@HRajaBJP) May 8, 2022
ஆனால் இக்கோயிலுக்கு சொந்தமான நிலத்திற்கு ஒரு கோடியைக் கொடுத்துவிட்டு பேருந்து நிலையம் அமைத்துள்ளனர். பல கோடிக்கு போகின்ற மதிப்புமிக்க நிலத்திற்கு ஒரு கோடி கொடுத்து பேருந்து நிலையம் அமைத்திருக்கின்றனர்.
மேலும், கோயிலுக்கு சொந்தம் உள்ள நிலம் அரசுக்கு சொந்தம் என்று நினைக்கின்றனர். அது தவறு, தனிநபர்கள் கோயிலுக்காக தானமாக எழுதி கொடுத்துள்ளனர். அதே போன்று வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 31 ஏக்கர் நிலம் மெட்ரோ ரயிலுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தை தொட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். கோயில் நிலத்தை மெட்ரோ நிர்வாகம் தொடக்கூடாது. தமிழகத்தில் இந்து கோயில்களை அழிப்பதற்காக முதலமைச்சரும், அமைச்சர் சேகர்பாபுவும் முயற்சி செய்கின்றனர். இவர்கள் ஏற்கனவே அயோத்தியா மண்டபத்தை அபகரித்த வழக்கு, மற்றும் பட்டின பிரவேசத்திலும் அறை வாங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu