நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை வழங்கியது. இது தொடர்பாக சில இடங்களில் போலீசார் பறிமுதல் செய்தும் உள்ளனர். பெயரளவுக்கு மட்டுமே சில இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் முழுவதிலும் பணம் தண்ணீராய் வாரி இறைக்கப்பட்டதை யாராலும் மறைக்க முடியாது. இதனை வெளிப்படையாக ஒவ்வொரு கட்சிகளும் கொடுத்தது. இது பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியும் உள்ளது.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்ட ஆதாரங்களை சேகரித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது. அதாவது நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். பதிவாகியுள்ள ஓட்டுகளை எண்ணக்கூடாது எனவும் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஓட்டு எண்ணுவதற்கு தடை இல்லை, ஆனால் கோவை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் இந்த வழக்கில் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது எனவும் கூறியுள்ளது. இதன் அடிப்படையிலேயே கோவை மாநகராட்சியில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி வேட்பாளர்களிடம் வழங்கப்பட்ட வெற்றிச் சான்றிதழில், உயர்நீதிமன்ற வழக்கு எண்: 3937.2022 என்ற முடிவுக்கு உட்பட்டவை ஆகும் என்கின்ற வார்த்தையை பேனாவில் எழுதப்பட்டுள்ளது.
இதனை வாங்கிய வேட்பாளர்கள் சற்று அச்சத்திலேயே இருக்கின்றனர். இப்போது இல்லை என்றாலும் வருங்காலங்களில் தீர்ப்பை வைத்து ஜெயித்தவர்களுக்கு அல்லது கோவை மாநகராட்சிக்கு சிக்கல் வரலாம் என கூறப்படுகிறது. தற்போது கோவை மாநகராட்சியில் திமுக பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்களுக்கே இந்த முடிவுகள் பாதகமாக வரலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
Source, Image Courtesy: Dinamalar