வக்ஃபு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பை தெரியப்படுத்துங்கள் - ஹெச்.ராஜா அதிரடி அழைப்பு

திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான நிலமா? ஹெச் ராஜா

Update: 2022-09-16 02:27 GMT

திருச்சி மற்றும் முக்கொம்பு சாலையில் உள்ள திருச்செந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் என்ற விவசாயி தனது மகளின் திருமண செலவுக்காக ஒன்றரை ஏக்கர் மற்றும் இரண்டு சென்ட் பரப்பளவு நிலத்தை விற்பதற்கு முயற்சி செய்தார். மேலும் இதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்தில் சென்று கேட்ட பொழுது, இந்த நிலம் முழுவதும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என்று, அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வரவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். பிறகுதான் பத்திரப்பதிவு செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.


இந்த ஒரு சூழ்நிலையில் தான் பா.ஜ.க பிரமுகர் எச்.ராஜா அவர்கள் திருச்செந்துறை கிராமத்திற்கு வந்தார். பின்னர் அங்கு உள்ள சந்திரசேகர சுவாமி கோவிலில் அபிஷேக ஆராதனையில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது பற்றி கூறுகையில், இந்த செய்தியை பற்றி தமிழகம் முழுவதும் கொண்டு செல்வோம் தமிழகத்தில் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலும் இப்படி சூழ்நிலை நிலவுவது வேதனையான ஒன்று ஒரு இந்து கிராமம் முழுவதும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என்று கூறுவது மிகவும் அபத்தமானது. இந்து கோவில் நிலம் எப்படி வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது.


தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சியா? அல்லது மாலிக்கபூர் ஆட்சியா? என்ன நடக்குது. இந்துக்கள் உள்ள இந்திய திருநாட்டில் இப்படிப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை. பா.ஜ.க சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News