கோவில் நகைகளை உருக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக, இந்து முன்னணி எழுப்பும் நெத்தியடி கேள்விகள் ! பதிலளிக்குமா இந்து விரோத விடியல் அரசு ?
இந்துக் கோவில் நகைகளை உருக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக, இந்து முன்னணி அமைப்பு பல சாட்டையடி கேள்விகளை தி.மு.க அரசுக்கு எதிராக எழுப்பியுள்ளது.
வரும், 26.10.2021 தமிழகம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக இந்து முன்னணி அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் கோவில் நகைகளை உருக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக பல முக்கிய கேள்விகளை இந்து முன்னணி எழுப்பியுள்ளது.
கேள்விகள் பின்வருமாறு :
1977இல் தங்கக்கட்டி வைப்பு திட்டமே இல்லை. எப்படி தங்க கட்டிகளை எங்கு டெபாசிட் செய்திருக்க முடியும்.
1977ல் ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லும் இந்த நடைமுறையை அரசு பக்தர்களிடம் முறையாக தெரிவித்ததா ? அரசு ஆணை வெளியிடப்பட்டதா? அப்படியானால் அரசு ஆணை எண், தேதி என்ன ?
தங்க நகைகள் இதுவரை உருக்கப்பட்டது சம்பந்தமான முழுமையான நடைமுறை குறித்து அரசு உடனே வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும்.
கோயில் எக்ஸிக்யூடிவ் ஆபிஸர் நகைகள் உருக்க முடிவு செய்யும் அதிகாரம் பெற்றது எப்படி ? இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தில் எந்த பிரிவில் அதிகாரம் தரப்பட்டுள்ளது ?
கோவில் மீதும் கடவுள் மீதும் நம்பிக்கை இல்லாத அரசு கோவில் நகைகளின் மீது மட்டும் நம்பிக்கை வைப்பதன் நோக்கம் தான் என்ன...????
இந்த கேள்விகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Image : The Commune