சிவசேனாவின் தளபதி ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க'வின் பக்கம் போன பின்னணி என்ன?

Update: 2022-06-22 11:33 GMT

சிவசேனா கட்சியின் மிகவும் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை தங்களின் பக்கம் தேவந்திர பட்னாவிஸ் எப்படி கொண்டு வந்தார் என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது புதிய அரசியல் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் மிக மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. பக்கம் சென்றுள்ளார். அதன்படி அவர்கள் தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளனர்.

சிவசேனாவுக்கு நம்பிக்கைகுரியவராக கருதப்பட்ட ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க.வுக்கு எப்படி சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய அமைச்சரவையில் நகர்ப்புறம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் ஏக்நாத் ஷிண்டே. இவரது கட்டுப்பாட்டில்தான் மும்பை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் மெட்ரோ ரயில் நிர்வாகம் இவரிடம் எவ்வித முடிவையும் கேட்பதாக இல்லையாம். முதலமைச்சர் உத்தவ் தாக்கரேதான் அனைத்து முடிவுகளையும் எடுப்பாராராம்.

இதற்கிடையில் மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸுக்கும் இடையில் ரகசியமாக பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. இதன் காரணமாகத்தான் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற பேச்சுகளும் அடிப்படுகின்றன.

மேலும், பணம் மற்றும் ஆட்கள் பலம் உள்ளிட்டவைகளில் ஷிண்டே மிகவும் அசைக்க முடியாத மனிதராக திகழ்ந்து வருகிறார். அது மட்டுமின்றி சிவசேனா எம்.எல்.ஏக்களிடம் ஷிண்டேவுக்கு நல்ல மரியாதையும் உண்டு. எனவே சிவசேனா ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்றால் அது ஷிண்டேவால் மட்டுமே முடியும் என்று பட்னாவிஸ் கணக்கு போட்டு அதற்கான காரியங்களில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் மறைந்த சிவசேனா மூத்த தலைவர் ஆனந்த் திகேயை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தை பார்க்க வந்த உத்தவ் தாக்கரே படம் முடியும் முன்பே புறப்பட்டு சென்றது ஷிண்டேவுக்கு மிகப்பெரிய மனவருத்தத்தை கொடுத்தது. இதில் ஷிண்டேயின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ளது.

கட்சி மீது வருத்தங்கள் இருந்த நிலையில், மற்றொரு புறம் தேவேந்திர பட்னாவிஸின் அரவணைப்பான வார்த்தைகள் இரண்டுமே ராஜ்ய சபா தேர்தலில் பா.ஜ.க. எளிதாக வெற்றி பெற்றது. இதில் ஷிண்டே பல்வேறு எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை அவர்களும் நிறைவேற்றினர்.

மேலும் சிவசேனா தலைமையிலனா ஆட்சி அமைக்கும்போது ஷிண்டே தனக்கு முதலமைச்சர் பதவி வரும் என்று காத்திருந்தார். ஆனால் அதனை உத்தவ் தாக்கரே எடுத்துக்கொண்டார். இது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் மனம் நொந்து கிடந்த ஷிண்டேயை தங்களின் பக்கம் எளிதாக தேவேந்திர பட்னாவிஸ் இழுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. விரைவில் மகாராஷ்டிராவில் ஆட்சி மாறவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News