வெளியாட்களை எப்படி எடுக்கலாம்.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு தெலங்கானா எம்.எல்.ஏ., எச்சரிக்கை.!
வெளியாட்களை எப்படி எடுக்கலாம்.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு தெலங்கானா எம்.எல்.ஏ., எச்சரிக்கை.!
உள்ளூர் ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் கடந்த 18ம் தேதி சென்னையில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெளி ஆட்களையே அதிகமாக தேர்ந்தெடுத்தது.
இந்நிலையில், உள்ளூர் வீரர்களை அணியில் தேர்ந்தெடுங்கள் இல்லையென்றால் பெயரை மாற்றி கொள்ளுங்கள் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு தெலங்கானா ராஷ்டிரா ஜமதி எம்.எல்.ஏ தனம் நாகேந்தர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாய்ப்பு வழங்கவில்லை.
அணியின் தேர்வின்போதும், ஏலத்தின் போதும் உள்ளூர் வீரர்கள் தவிர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் போக்கு தொடரும் பட்சத்தில் கிரிக்கெட் போட்டியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடும். அதனை தவிர்க்கும் பட்சத்தில் எங்கள் ஊரான ஐதராபாத் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ., வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்த சம்பவம் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.