வேலூர் இப்ராஹிம் கூட்டத்தில் கலவரம் ஏற்படுத்த முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினர்!

வேலூர் இப்ராஹிம் கூட்டத்தில் கலவரம் ஏற்படுத்த முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினர்!

Update: 2021-01-27 09:24 GMT

வேலூர் இப்ராஹிம் பேசுவதற்கு மனித நேய மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று  பா.ஜ.க சார்பில் திட்டமிடப்பட்டிருந்த குடியரசு தின விழாவுக்கு, ஏகத்துவ பிரசார ஜமாத் கட்சியின் தலைவர் வேலூர் இப்ராஹிம் அழைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் வாகனத்தில் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அவரை, அப்பகுதி மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்த பா.ஜ.க நிர்வாகிகள், அவரை பேசச் சொல்ல, மைக்கைப் பிடித்து பேச ஆரம்பித்தார் இப்ராஹிம்.

அப்போது, அங்கு வந்த மனித நேய மக்கள் கட்சியினர் சிலர், இப்ராஹிம் பேச எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், இப்ராஹிமை கீழே இறங்குமாறும் கூறினர். ஆனார் வேலூர் இப்ராஹிம் பேச்சை தொடர்ந்தார்.

இதனால் மேலும் கோபமடைந்த அவர்கள், பிரசார வாகனத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால், அங்கே கூடியிருந்த பா.ஜ.க'வினருக்கும், எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. நிலைமையை உணர்ந்த காவல்துறை அதிகாரிகள்  இப்ராஹிமை வாகனத்தில் இருந்து இறக்கி, அருகே இருந்த கட்டிடம் ஒன்றின்  உள்ளே அழைத்துச் சென்று பாதுகாப்பாக அமர வைத்தனர்.

பின் கலவரம் ஏற்படுத்த முயன்ற 40 பேரை கைது செய்து, மற்றவர்களை  சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர் காவல் துறையினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News