சாத்தூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட மனைவி தோல்வியடைந்ததால் அவரது கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளது. அங்கு திமுக 18, மதிமுக 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், சாத்தூர் முனிசிபல் காலனியைச் சேர்ந்தனர் சுகுணா. இவரது கணவன் நாகராஜ் இவர் சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் துப்புறவு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நகராட்சித் தேர்தலில் 19வது வார்டில் சுகுணா அதிமுக சார்பாக நின்றார். அவருக்கு கணவன் நாகராஜ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஏற்கனவே சுகுணா அதே வார்டில் வெற்றி பெற்றவர் என்பதால் இந்த முறையும் கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவார் என பொதுமக்கள் மற்றும் நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.
ஆனால் ஓட்டு எண்ணிக்கையின் போது நாகராஜிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 19வது வார்டில் மொத்தம் 930 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனிடையே ஓட்டு எண்ணிக்கையில் திமுக 595 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் அதிமுக வேட்பாளர் சுகுணா 215 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இதனால் மனைவி தோல்வியை பார்த்து நாகராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலையை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். இதற்கு போய் யாராவது தற்கொலை செய்வார்களா என்று பொதுமக்கள் பேசி வருகின்றனர்.
Source, Image Courtesy: Vikatan