உச்சகட்ட விறுவிறுப்பில் ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தல்.! BJP vs TRS?

உச்சகட்ட விறுவிறுப்பில் ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தல்.! BJP vs TRS?

Update: 2020-11-28 11:00 GMT

ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தல்களில் (GHMC) முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் போட்டியும், பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது, பா.ஜ.க, உயர்மட்ட தேசிய தலைவர்களை பிரச்சாரத்திற்காக அழைத்துள்ளது. 

ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி (TRS) தனது பிடியை அங்கே தக்க வைத்துக் கொள்ள  என்று ஒரு கௌரவப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டுள்ளது அண்மையில் டுபாக்கா சட்டமன்ற தொகுதியை கைப்பற்றி ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய பா.ஜ.க, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

 சட்டமன்ற வெற்றியினால் உற்சாகமடைந்த பா.ஜ.க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மற்றும் பிரகாஷ் ஜவடேகர், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் இளைஞர் பிரிவு தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட பலரையும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

 ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தனது கட்சி வேட்பாளர்களை வாபஸ் பெற்று ஏற்கனவே பா.ஜ.கவிற்கு தன்னுடைய ஆதரவை வழங்கி விட்டார்.

 150 வார்டுகளுக்கு 1,122 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குபதிவு டிசம்பர் 1ஆம் தேதியும், டிசம்பர் 4ம் தேதி முடிவுகளும் அறிவிக்கப்படும். முஸ்லிம் லீக்கை எதிர்த்து பா.ஜ.க வாக்குகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.கவின் மாநில பிரிவு தலைவர் பாண்டி சஞ்ஜெய், ஏற்கனவே ஹிந்து விரோத கட்சி என்று TRS ஐக் குற்றம் சுமத்தியுள்ளார். 

 150 வார்டுகள் கொண்ட GHMCயில் கடந்த முறை 102 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையாக வெற்றி பெற்ற TRS கட்சி இப்பொழுது பா.ஜ.கவின் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. கடந்த தேர்தல்கள் மற்றும் தற்போதுக்கும் இடையில், பா.ஜ.கவின் வலிமை கணிசமாக அதிகரித்துள்ளது.

 2019 ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலத்தில் 17 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க நான்கை வென்றது குறிப்பிடத்தக்கது.

TRS ஐப் பொருத்தவரை, KCR மகன், கே டி ராமாராவ் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குகிறார். பல மாநில அமைச்சர்கள் வெவ்வேறு பிரிவுகளில் பிரச்சாரம் செய்கிறார்கள். 

ஏற்கனவே தெலுங்கானா அரசு மேற்கொண்ட வளர்ச்சி நடவடிக்கைகளைக் கூறி வாக்கு சேகரிக்க முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே தனது கட்சி அறிக்கையில் இலவச குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

 உண்மையில் தெலுங்கானாவின் எதிர்க்கட்சி ஸ்தானத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. தன்னுடைய வேதத்தையும் இழந்துள்ளது. வாக்காளர்களை ஈர்க்க முயற்சித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு உள்ளிட்ட பல இலவச விஷயங்களை காங்கிரஸ் அறிவித்திருந்தாலும், அதனுடைய பிரச்சாரத்தில் அந்த அளவு வேகமோ விறுவிறுப்போ இல்லை.

 சட்டமன்ற தேர்தலில் மிகவும் மோசமாக போராடி தோற்ற தெலுங்கு தேச கட்சியின் "சந்தோஷமான ஹைதராபாத்" என்ற வாசகங்களுடன் அக்கட்சியும் களத்தில் உள்ளது. இதுவும் தேர்தலில் ஏதேனும் தாக்குப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 MIM கட்சிக்கு பலம் இருந்தாலும், முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளை தாண்டி அவற்றுக்கு ஏதேனும் ஆதரவு உள்ளதா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமே.

Similar News