பிரதமர் மோடியின் செயல்பாடுகளையும், தேசப்பற்றையும் பார்த்து பாஜக கட்சியில் இணைந்தேன் என்று முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்னா யாதவ் கூறியுள்ளார்.
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு இன்று சென்ற சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலாயம் சிங்கின் யாதவின் இளைய மருமகள் அபர்னா யாதவ் யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது தேசிய தலைவர்கள் மற்றும் உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் பின்னர் அபர்னா யாதவ் பாஜவுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது: எனக்கு நாடுதான் முதலில் முக்கியம். பின்னர்தான் வீடு. பிரதமர் மோடியின் பணிகள் மற்றும் தேசப்பற்றால் கட்சியில் வந்தேன். மேலும், அபர்னா யாதவ் வருகின்ற உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Source: Daily Thanthi
Image Courtesy: India Today