தி.மு.கவில் இருந்து விலகுபவர்களின் பிறப்பையே சந்தேகிக்கிறேன் - புலம்பலின் உச்சத்தில் துரைமுருகன் பேச்சு!

தி.மு.கவில் இருந்து விலகுபவர்களின் பிறப்பையே சந்தேகிக்கிறேன் - புலம்பலின் உச்சத்தில் துரைமுருகன் பேச்சு!

Update: 2020-12-26 18:26 GMT

அரசியல் கட்சிக்கு அழகு பேச்சாற்றல், கண்ணியமான பேச்சு மற்றும் சொற்கள், மக்களின் பாதுகாவலன் என மார்தட்டினால் பத்தாது மனதில் இனிமையும், வார்த்தைகளில் கனிவும் வேண்டும் ஆனால் மாறாக "எங்க கட்சிக்கு துணையா இருந்தா மனுஷன், இல்லைன்னா அவன் பிறப்பையே சந்தேகிக்கிறேன்" என திமிராக கூறுவதற்கு பெயர் அரசியல்வாதியும் அல்ல அந்த கட்சி மக்களுக்கான கட்சியும் அல்ல மாறாக மக்களை எப்பொழுது ஏமாற்றலாம் என காத்திருக்கும் கட்சி என பெயர்.

இந்த முகம் சுழிக்கும் பேச்சை பேசியது தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன். திருப்பத்தூரில் கிராம சபை என்ன பெயரில் தி.மு.க'வின் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதாவது, "மாற்றாருக்கு மண்டியிடுகிற கோழைத்தனம்  தி.மு.க'காரனுக்கு இல்லை, அப்படி இருக்கிறவன் தி.மு.க'காரன் இல்லை! அப்படி இருந்தால் அவன் பிறப்பையே சந்தேகப்படுகிறேன்" என பேசியுள்ளார்.

இது கேட்பவர்களை மட்டுமின்றி தி.மு.க'வில் இருந்து விலகியவர்களையும், மீண்டும் தி.மு.க'வில் இணைந்தவர்களையும் மிகுந்து கோபத்திற்கும், மனவருத்தத்திற்கும் ஆளாக்கியுள்ளது. அரசியலில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் ஒரு அரசியல்வாதியை கட்சி மாறவும், விலகவும் செய்கின்றன. ஆனால் இப்படி துரைமுருகன் பேசியிருப்பது, தி.மு.க'வில் இருந்து விலகிய கு.க.செல்வம், வி.பி.துரைசாமி ஆகியோரையும், தி.மு.க'வில் இருந்து விலக்கப்பட்ட கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, குஷ்பு போன்றோரையும், தி.மு.க'வில் இருந்து விலகி சில காலம் மாற்று கட்சியில் இருந்து பின் தி.மு.க'வில் இணைந்த எஸ்.கே.வேதரத்தினம், செந்தில் பாலாஜி ஆகியோரையும் முகம் சுழிக்கவும் கோபமடையவும் செய்துள்ளது.

மேலும் சென்ற வாரம் இதே பொதுச்செயலாளர் துரைமுருகன் "தி.மு.க'வில் இருந்துகொண்டே வருமான வரித்துறைக்கு காட்டிக்கொடுக்கின்றனர்" என புலம்பினார். தற்பொழுது "தி.மு.க'வில் இருந்து விலகியவர்களின் பிறப்பை சந்தேகிக்கிறேன்"என கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தல் தோல்வி பயத்தையும், தி.மு.க'வில் நடந்தேறி வரும் உட்கட்சி மோதல்களையும் வைத்தே இப்படி பேசியிருக்கிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான உடன்பிறப்புக்கள்.

என்னதான் பயம், ,வெறுப்பு என்றாலும் மூத்த தலைவருக்கு வார்த்தைகளில் கவனம் வேண்டாமா? என்கின்றனர் மூத்த அரசியல் பிரமுகர்கள்.

Similar News