மறுபடியும் முதலமைச்சராக வருவேன்: பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.!
மறுபடியும் முதலமைச்சராக வருவேன்: பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.!;
நீண்டநாள் திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய நான், பொதுமக்களின் ஆதரவோடு மறுபடியும் முதலமைச்சராக வந்து அந்த திட்டத்தை துவக்கி வைப்பேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருப்பூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் அவினாசி சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு நான் தான் அடிக்கல் நாட்டினேன். மறுபடியும் தமிழக மக்களின் ஆதரவோடு முதலமைச்சராக வந்து, அந்த திட்டத்தை துவக்கி வைப்பேன்.
மேலும், விவசாயிகளின் துயரத்தை போக்குவதற்காகவே விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளின் நலன் கருதி, ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு தற்போது அதில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது. எப்போதும் அதிமுக அரசு விவசாயிகளின் நலன்சார்ந்தவையாக செயல்படும். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.