ஐபேக் உளவாளிகள் என்னை பின் தொடர்கிறார்கள்.? அமைச்சர் பேச்சால் பரபரப்பு.!

ஐபேக் உளவாளிகள் என்னை பின் தொடர்கிறார்கள்.? அமைச்சர் பேச்சால் பரபரப்பு.!

Update: 2020-12-31 11:43 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற நிலையில் ஐபேக்கை சேர்ந்த நபர்கள் தன்னை பின் தொடர்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், மதுரை திருமங்கலத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எதையும் வெளிப்படையாக பேச முடியாத நிலை உருவாகியுள்ளது.

வீட்டிலோ, வெளியிலோ எதையும் பேசமுடிவதில்லை. ஐபேக் என ஒன்று இருக்கிறது. அவர்கள் எனக்கு பின்னாலேயே கேமராவை வைத்துக்கொண்டு சுற்றி வருகிறார்கள். 5 நிமிடத்தில் வீடியோ எடுத்து போட்டு விடுவார்கள் என கூறியுள்ளார்.

சமீபத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற ஆர்.பி.உதயகுமார் அங்கு அவரை காண வந்த தொண்டர் ஒருவரை பிடித்து தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஒரு வேளை அதனை குறிப்பிட்டுதான் அமைச்சர் அவ்வாறு பேசியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 

Similar News