தி.மு.க வெற்றி பெறவில்லை என்றால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்வேன் - தி.மு.க எம்.பி ஜகத்ரட்சகன் ஆவேசம்!
தி.மு.க வெற்றி பெறவில்லை என்றால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்வேன் - தி.மு.க எம்.பி ஜகத்ரட்சகன் ஆவேசம்!
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறவில்லை என்றால், மேடையிலே தற்கொலை செய்து கொள்வேன் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ஜகத்ரட்சகன் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்கான தேர்தல் பணிகளின் அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றன.
2016 ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயாணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பநிலை நிலவுவதால் அந்த வாய்ப்பை தி.மு.க பயன்படுத்திக்கொள்ளப்பார்க்கிறது.
புதுச்சேரி தி.மு.க. வின் முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் எனத்தெரிகிறது. புதுச்சேரி ஜெகத்ரட்சகனின் சொந்த ஊராகும். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த சமூக வாக்குகள் கணிசமான அளவில் கிடைக்கும் என கணக்கு போடுகின்றனர். அரக்கோணம் எம்.பி. யாக உள்ள ஜெகத்ரட்சகன் தற்போது புதுச்சேரி அரசியல் பணிகளில் தீவிரமாக செயல்பட தயாராகிவிட்டார்.
இருபது ஆண்டுகளாக புதுச்சேரியில் தி.மு.க ஆட்சியில் இல்லை என்ற நிலையை மாற்ற வேண்டுமென தி.மு.க தலைமைக்கு எடுத்துக்கூறப்பட்டதன் விளைவாக ஜெகத்ரட்சகனை புதுச்சேரியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவுக்கு தி.மு.க வந்துள்ளதாக கூறுகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க. தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம் என்ற முழக்கத்தோடு, அக்கட்சியினரின் செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஜகத்ரட்சகன், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறவில்லை என்றால், மேடையிலே தற்கொலை செய்து கொள்வேன் என ஆவேசமாக கூறியுள்ளார்.