பெண் வயதுக்கு வந்தாலே திருமணம் செய்திட வேண்டும்: சமாஜ்வாதி எம்.பி.க்கள் அதிர்ச்சி தகவல்!

நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

Update: 2021-12-18 11:59 GMT

பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதற்கு அனைத்து தரப்பிலும் ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர் பெண் வயதுக்கு வந்து விட்டாலே திருமணம் செய்து வைத்திட வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.பி. சயது துபெய்ல் ஹசனிடம் செய்தியாளர்கள் பெண்களின் திருமண வயது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பெண்கள் வயதுக்கு வந்து விட்டாலே திருமணத்தை நடத்தி வைத்திட வேண்டும். வயதுக்கு வருகின்ற பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொண்டாலும் தவறில்லை எனக் கூறியுள்ளார். மேலும், பெண் கருவுற்றல் வயதை அடைந்த உடனே திருமணத்தை செய்து வைத்திட வேண்டும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், மற்றொரு சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.பி. ஷபீக்கியூர் ரஹ்மான் கூறும்போது, பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் குறைந்த வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். மத்திய அரசு கொண்டு வரும் இத்திட்டத்தை ஆதரிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார். இவர்களின் கருத்துக்கு ஒட்டுமொத்த பெண்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி பெண் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளிட்டோரும் இவர்களின் கருத்தை எதிர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Source: Daily Thanthi

Image Courtesy: iPleaders


Tags:    

Similar News